படைப்புழுக்களால் ஏற்படும் சேதம் மாடு மேய்ந்தால் ஏற்படும் சேதத்தை விட அதிகமாகும் - மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் தெரிவிப்பு

ஏ.எல்.எம்.ஷினாஸ்-
பெரியநீலாவணை விவசாய விரிவாக்கல் நிலையம் ஏற்பாடு செய்த தற்போது நாட்டில் விவசாயத் துறைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள படைப்புழு பற்றி விவசாயிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு வீதி ஊர்வவலம் நேற்று (21) பெரியநீலாவணை பிரதான வீதியில் இடம் பெற்றது.

நிலையத்தின் பொறுப்பதிகாரி திருமதி ராதிக்கா ரவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக
கலந்து கொண்டு உரையாற்றிறிய அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றும் போது,
படைப்புழுவின் தாக்கம் ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டு தற்போது மொனராகல , அனுராதபுரம், குறுணாகல, மட்டக்களப்பு, நுவரேலியா மாவட்டங்களுக்கும் தாவியுள்ளது. இதன் தாக்கம் குறுகிய காலத்துக்குள் மிகவும் பயங்கரமாக விரைவாக உள்ளது. இலங்கையில் பொருளாதாரத்தை பேரதும் பாதிக்கும் அபாயம் உள்ளது. தற்போது சோளப்பயிர்களை தாக்கி வரும் இந்தப் புழுவானது சோளப்பயிர்ச் செய்கையின் அறுவடை முடிவடைந்ததும் ஏனைய பயிர்களையும் தாக்கும். குறிப்பாக மரக்கறி, பழ வகைகள் மற்றும் அவரை இன பயிர்களை அதிகளவில் தாக்கும். இதனை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு அழிக்க வேண்டும்.
படைப்புழு பீடையின் தாக்கத்தை இல்லாமல் செய்வதற்கு அல்லது அழிப்பதற்கு விவசாயிகள், மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் முன்வர வேண்டும். மாடுகள் பயிர்ச்செய்கைக்குள் புகுந்து சேதப்படுத்துவதிலும் பார்க படைப்புழுவால் ஏற்படும் சேதம் மிகவும் மோசமாக உள்ளது.
1970 ஆண்டு நெல்லினத்தை தாக்கிய அரக்கொட்டி பீடயை அதற்கு முன்னர் மக்கள் அறிந்திருக்கவில்லை. அப்போது அரசாங்கம் விவசாயத் திணைக்களங்கள் ஊடாக ஏற்படுத்திய விழிப்புணர்வு வேலைத் திட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடிந்தது. அதனால் இலங்கையின் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது என்றார்.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தின் போது படைப்புழு பற்றிய தகவல்களை பதாகைகள் மற்வம் துண்டுப்பிரசுரங்கள் ஊடாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. பெரியநீலாவணை விஸ்னு மகா வித்தியாலய மாணவர்களின் விழிப்புணர்வு நாடகமும் இங்கு காண்பிக்கப்பட்டன. சிறந்த விவசாய செய்கையாளர்களுக்கு உபகரணங்களும் இங்கு கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் நிந்தவூர் வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.எம்.மஜீத், பாடவிதான உத்தியோகத்தர்களான எஸ்.டப்ளியு.ஏ.நிகார், ஏ.ஜெயினுலாப்தீன் உட்பட பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -