யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினால் (முஸ்லிம் மஜ்லிஸ்) 'இன்கிலாப்' சஞ்சிகையின் 8 ஆவது இதழ் இன்று(26) பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் வைத்து வெளியிடப்பட்டது.
இதன் போது பதில் துணைவேந்தராக பேராசிரியர் மிகுந்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நூலினை வெளியீட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் தற்போதைய முஸ்லீம் மஜ்லீஸ் தலைவர் உப தலைவர் செயலாளர் உப செயலாளர் சஞ்சிகை குழுவினர் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் முஸ்லிம் சமூகத்தின் மிகப்பாரிய சக்தியாக அடையாளப்படுத்தப்படும் மாணவ அமைப்புக்களில் தொன்மையானதாகும்.