யாழில் 10ஆவது தடவையாக வடக்கின் நுழைவாயில் சர்வதேச வர்த்தக் கண்காட்சி

பாறுக் ஷிஹான்-
டக்கின் நுழைவாயில் எனும் தொனிப்பொருளில் வருடாந்தம் நடைபெற்று வரும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை (Jaffna International Trade Fair -2019) கண்காட்சி இம்முறையும் 10 ஆவது தடவையாகவும் யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நேற்று (25) ஆம் திகதி ஆரம்பாகியது.

இக் கண்காட்சி கூடங்களை யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் திறந்து வைத்தார். இந்தக் கண்காட்சியை ஞாயிற்றுக்கிழமை (27) வரை காலை 10 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை பார்வையிடமுடியும்.

உள்ளுர் உற்பத்திகள் மற்றும்ம் வெளியூர் பிரபல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளன. 350 இற்கு மேற்பட்ட கண்காட்சி கூடங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
பத்தாவது வருடமாக நடைபெறும் இக் கண்காட்சியில் உள்நாட்டு , வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குபற்றி தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தவுள்ளனர். அத்துடன் கல்வி ஆலோசனைகள் , மருத்துவ பரிசோதனைகள் , மருத்துவ ஆலோசனைகள் தொழில் வழிகாட்டல்கள், விசேட உணவு வகைகள் மற்றும் குடிபானங்கள் வீடுகளிற்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், கட்டட நிர்மானப் பொருட்கள் மற்றும் அழகுசாதனங்கள் மற்றும் அழகுக் கலைகள் சேவைகள், நிறுவனங்களிற்கான விசேட நிகழ்வுகள், கல்வி ஆலோசனைகள், மற்றும் மருத்துவப் பரிசேதனை என்பன இக்கண்காட்சியில் பிரதான அம்சங்களாக இடம்பெற்று உள்ளன.

அதேவேளை கண்காட்சியினை பார்வையிடுவதற்கு பாடசாலை சீருடையுடன் வரும் மாணவர்களுக்கு கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது எனவும் , ஏனையவர்களுக்கு 50 ரூபாய் நுழைவு கட்டணமாக அறவிடப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.






























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -