பொலிஸ் பரிசோதகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் வயது 54 இன்று(05-12-2018)அதிகாலை ஓரு மணியளவில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இவரின் இழப்பு பேரிழப்பாகும் என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஸ்ரீலங்கா சுதந்திரத் கட்சியின் முன்னால் கல்முனை தொகுதி அமைப்பாளரும் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி வந்த றஹ்மான் அவர்களின் இழப்பு இந்த நாட்டுக்கும் சமூகத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் பாரிய இழப்பாகும்.தாய் நாட்டுக்கு தனது பொலிஸ் சேவை மூலமாக பல தியாகத்துடன் செயற்பட்டு கடமையாற்றிய இவர் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காகவும் பாடுபட்டுள்ளார் .சமூக ஈடுபாடு கொண்டு தனது அரச சேவையின் பல சேவைகளை மக்களுக்காகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
தனது குடுப்பத்துக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக மேலும் கிழக்கு ஆளுனரின் அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.