கந்தளாய் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் பதினெழு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர் சமன்ஏக்கநாயக்க தலைமையில் இன்று(13) சபை அமர்வு கூடிய போதே 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
24 உறுப்பினர்களை கொண்ட கந்தளாய் பிரதேச சபையில் இன்றைய அமர்வில் பங்கு கொண்ட 22 உறுப்பினர்களில் தவிசாளர் சமன் ஏக்கநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு செலவு திட்டம் நிறைவேறியமை சிறப்பம்சமாகும்.
கந்தளாய் பிரதேச சபையானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் வசம் உள்ள கந்தளாய் பிரதேச சபையானது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு,ஐக்கிய தேசியக் கட்சி,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மக்கள் விடுதலை முண்ணனி மற்றும் சுயேற்சை குழுவும் சேர்ந்த உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
ஆதரவாக பதினேழு வாக்குகளும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஐந்து வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளது வெளி நடப்பு செய்தனர்.