பிராந்தியத்தின் முன்னோடி முன்பள்ளிகளில் ஒன்றான சைல்ட் பெஸ்ட் ஆங்கிலக் கல்லூரியின் 14 ஆவது வருடாந்த பாடசாலை விழா, நிறுவனத்தின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆங்கில பிரிவின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் அண்மையில் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் மாணவ முத்துக்களின் குழு நடனங்கள் கலை மற்றும் தனி நிகழ்வுகள் என அரங்கேறிய நிகழ்வுக்கு பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி சித்தீக் ஜெமீல் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பிரிவின் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸில் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டிருந்தார்.
குழந்தைகளின் ஆங்கில தமிழ் மொழி விருத்திக்கும், ஏனைய திறன் விருத்திகளுக்கும், மார்க்கத்தையும் ஏனைய மனிதர்களையும் நேசிக்கக்கூடிய ஆளுமை மிக்க ஒருவராகவும், பாடசாலைக் கல்வியிலும் ஏனைய திறன்களிலும் முன்னிலை பெறக்கூடிய மாணவர்களை கடந்த 14 வருடங்களாக உருவாக்கி வரும் சைல்ட் பெஸ்ட் ஆங்கிலக் கல்லூரியின் வருடாந்த நிகழ்வுகளுக்கு வைத்திய கலாநிதி ஜெ.ஹைளுள் மஷாஹிட், CIC நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எம்.வி.அப்துல் பஉக்,வைத்திய கலாநிதி ஏ.எஸ்.எம்.பௌஸாட், சட்டத்தரணி எம்.ஐ.ஆர்.ஹாதி, உள்ளிட்ட பலர் கௌரவ அதிதிகளாக பங்குகொண்டிருந்தார்.
பார்வையாளர்களால் மண்டபம் நிறைந்திருந்த குறித்த நிகழ்வுகளை எம்.எஸ்.எம்.சப்ரீன் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வின் இறுதியில் மாணவ மணிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.