பைசல் காசீமை வரவேற்கும் நிகழ்வு நாளை நிந்தவூரில்


சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவத் துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற பைசல் காசீம் அவர்களை வரவேற்கும் நிகழ்வு நாளை [28.12.2018] வெள்ளிக்கிழமை நிந்தவூரில் இடம்பெறவுள்ளது.

இந்த வரவேற்பு நிகழ்வுகளில் முக்கியமாக நிந்தவூர் பிரதேச மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊர்வலமும் அதனைத் தொடர்ந்து நிந்தவூர் மலேசியாவின் திடலில் மாபெரும் பொதுக்கூட்டமும் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வுகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொள்கிறார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -