உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானமொன்று மகிந்தவின் கோட்டையில் திடீரென்று தரையிறக்கம்.

லகின் இரண்டாவது மிகப்பெரிய விமானமொன்று இலங்கையில் திடீரென்று தரையிறங்கியதாக தென்னிலங்கைத் தகவல்கள் கூறுகின்றன.

அன்டநோவ் 124 ரக சரக்கு விமானம் ஒன்றே இவ்வாறு அவசரமாக மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

தாய்லாந்து நாட்டிலிருந்து உகண்டா நோக்கி பயணித்த இந்த விமானம் நேற்று அதிகாலை 5.26 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விமானத்தின் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் இன்றுகாலை 10.26 அளவில் அது பயணத்தை மீண்டும் ஆரம்பித்தது.ibc
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -