கல்முனை மேல் நீதிமன்ற வலயத்துக்கு உட்பட்ட 07 நீதிமன்ற வளாகங்களில் 2019/2020 வருடத்துக்கான சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து கேள்வி மனு பத்திரம் கோரப்பட்டு உள்ளது.
சுத்திகரிப்பு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள விரும்புவோர் உரிய விண்ணப்ப படிவங்களையும், மேலதிக விபரங்களையும் கல்முனை மேல் நீதிமன்ற கணக்காளரிடம் மீளளிக்கப்படாத 100 ரூபாயையும், மீளளிக்க கூடிய வைப்பாக 100,00 ரூபாவையும் வருகின்ற 26 ஆம் திகதி புதன்கிழமை மதியம் 12.00 மணி வரை பெற்று கொள்ள முடியும் என்று கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்தல் விடுத்துள்ளார்.
விண்ணப்பங்கள் வருகின்ற 26 ஆம் திகதி புதன்கிழமை மதியம் 2.00 மணி வரை ஏற்கப்பட்டு அன்றைய தினம் பின்னேரம் 3.00 மணிக்கு கேள்விதாரர்கள் முன்னிலையில் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.