சதுரிக்கா சிரிசேன எழுதிய ஜனாதிபதி தாத்தா நூலில் இருந்து ஒரு சுவாரஷ்யம்..!

ப்பா சிறு பராயத்திலிருந்தே பிராணிகளிடம் அன்பு செலுத்துபவராகவே இருந்தார்...
அதிலும் நாய்கள் என்றால் அவருக்கு உயிர். அந்த அன்புதான் பின்னாளில் இலங்கை மக்கள் மீதான பாசமாக பரிணமித்திருக்கின்றது என்று குணபால பெரியப்பாவும் அப்பாவின் டிங்கிரி சித்தியும் அடிக்கடி சொல்வார்கள்..

யாராவது "நன்றி கெட்ட நாய்" என்று யாரையாவது திட்டினால் கூட அப்பாவுக்கு கோபம் மகாவலி கங்கையாய் பொங்கிப் பீறிட்டுக் கிளம்பி பிரவாகமெடுக்கும்..

ஒரு தடவை சின்ன வயதில் அப்பா ஆசையாய் வளர்த்து வந்த "டொமீ" என்ற நாய்க்குட்டியை, கீழ் வீட்டு தயாவதி மேலே தூக்கிப் போட்டு கேட்ச் பிடித்து கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கும் போது கை தவறி, நம் திஸர பெரேரா கேட்ச் ட்ராப் செய்வது போல், "தொபுக்கடீர்" என்று,
கீழே விட்டு விட,
அப்பா அவள் மார்பிலேயே எட்டி உதைத்திருக்கிறார்..அவள் பொலொன்னறுவை பெரியாஸ்பத்திரியில் 22 ஆம் வார்ட்டில் மூணு நாள் அட்மிட் ஆகி திரும்பி இருக்கிறாள்..இதுவும் டிங்கிரி பாட்டி சொன்னதுதான்..

இப்போதும் கூட அப்பா இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார்..ஜொனீ,பர்சி என்று அவற்றுக்கு நாமகரணம் பண்ணி ரொம்பச் செல்லமாகவே வளர்த்து வருகின்றார்..

அப்பா எது சாப்பிட்டாலும் அவற்றுக்குக் கொடுக்காமல் சாப்பிடுவதில்லை..அது மான் இறைச்சியாய் இருந்தாலும் சரி,மஞ்ஞொக்காவாய் இருந்தாலும் சரி..

அப்பா எங்காவது வெளியூர் சென்று வந்தால் எதையாவது பாக்கெட்டில் திணித்துக் கொண்டு வந்து அவற்றுக்கு ஊட்டி விட்டு,நேரம் போவது தெரியாமல் கொஞ்சிக் குலாவிய பிறகுதான் மறு காரியம் பார்ப்பார்...இதிலும் ஃபாரின் ட்ரிப் என்றால் ஃப்ளைட்டில் கொடுக்கும் சாக்லேட்,பிஸ்கெட் என்று ஏராளமாய் அள்ளிக் கொண்டு வந்து நாய்களுக்கே கொடுத்துத் தீர்த்து விடுவார்.சமயங்களில் அம்மா கூட கோபித்துக் கொள்வதுண்டு..

ஒரு முறை இப்படித்தான் அப்பா இரண்டு நாள் ஃபாரின் டூர் முடித்து ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பி இருந்தார்..ஜொனீயும்,பர்சியும் வாலை ஆட்டிக்கொண்டே அவர் முன்னால் ஓடி வந்து செல்லமாய் சிணுங்கின..தனது குர்தாவின் இரண்டு பாக்கெட்டுகளிலும் கையை விட்டு அள்ளி இரண்டு நாய்களின் முகத்தருகிலும் இரு கைகளையும் விரித்தார்...
கை நிறைய கஜுக்கொட்டை..

ஆர்வத்துடன் முகத்தை அருகில்.கொண்டு சென்ற இரண்டு நாய்களும் கஜுவை முகர்ந்து பார்த்து விட்டு வெறுப்பான ஒரு முனகலுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டன..அப்பா ஜொனியின் முகவாயை பிடித்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ஊட்டி விட போராட அப்பாவின் விரலை கடித்து வைத்து விட்டு ஜொனீ உள்ளே ஓடி விட்டான்..

அப்பாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.அப்பாவின் ஆத்திரமும்,கோபமும் பற்றித்தான் வாசக அன்பர்களுக்குத் தெரியுமே..?சீயா திட்டினார் என்று வயலையே கொளுத்திய முன் கோபக்காரராயிற்றே அப்பா..
" நாய் கூட சாப்பிடாத இவ்வளவு கேவலமான கஜுவையா ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸில் கொடுக்கின்றார்கள்..
அவர்களை என்ன செய்கிறேன் பார் " என்று வெடித்தார்..

",விடுங்கள் அப்பச்சி..
இது ஒரு சின்ன விடயம்.." நான்..

"அது எப்படி சின்ன விடயம் என்று விடுவது..நாளைக்கு நம் நாட்டின் சாதாரணக்குடிமகனும் இதனால் பாதிக்கப்படத்தானே போகிறான்.."

" இருந்தாலும் ஆத்திரப்படாமல் நிதானமாகக் கையாளலாமே அப்பச்சி..?"

" ஒரு ஃபாரின் டெலிகேட்டுக்கு இதையே பரிமாறினால் நம் தேசத்தின் பேர் கெட்டுப் போய் விடாதா. ?நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்..?ஒரு தலைவனாக நான் ஆக்‌ஷன் எடுப்பது காலத்தின் கட்டாயம்..தவிரவும் இந்தக் கஜுவை நாய் கூட சாப்பிடாது என்று தெரியாமல் நான் வேறு நாலு ப்ளேட் கேட்டு வாங்கி சாப்பிட்டுத் தொலைத்து விட்டேன்.ஹிடங். " என்றார் நாத் தழுதழுக்க..

ஒரு தன்னிகரில்லாத் தலைவனின் கடமை உணர்ச்சியின் முன்னால் நான் தோற்றுப் போனேன்...

- சதுரிக்கா சிரிசேன எழுதிய "ஜனாதிபதி தாத்தா" புத்தகத்திலிருந்து,( பக்கம் 377,378)

(வாசிப்பு தொடரும்...)

மொழி பெயர்ப்பு - பாஹிம் அமானுல்லாஹ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -