தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) விசேட ஒன்று கூடல் (22) வியாழக்கிழமை சாய்ந்தமருது சீ பீரிஸ் ரெஸ்டுரண்டில் காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அமைப்பின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) தவிசாளர் றியாத் ஏ. மஜீதின் நெறிப்படுத்தலில் இடம்பெறவுள்ள இம் மாதாந்த ஒன்று கூடலில் ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும், விரைவில் நுஜா ஊடக அங்கத்தவர்களைக் கொண்ட குழு இந்தியாவுக்கான ஒரு வார கால சுற்றுலா செல்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவது தொடர்பாகவும், புதிய அங்கத்தவர்களை ஒன்றியத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பாகவும் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தவறாது நுஜா அங்கத்தவர்கள் கலந்து கொள்ளுமாறும் தவிசாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் றியாத் ஏ. மஜீத் தெரிவித்தார்.