அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மழை நீர் தொடர்பான சர்வதேச மாநாடு


லங்கை மழை நீர் சேகரிப்பு மையம் மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாடு எதிர்வரும் 28,29ஆம் திகதிகளில் பெலவத்தை, பத்தரமுல்லையில் அமைந்துள்ள சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
நகர திட்டமிடல்; மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் ஆரம்பமாகவுள்ள இம்மாநாட்டிற்கு அமைச்சர் தினே~; குணவர்தன மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர்; டீ.ஜி.எம்.வீ.ஹப்புஆராச்சி ஆகியோர் அதிதிகளாக கலந்துகொள்ள இருப்பதுடன், சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஹேரத் மன்திலக்க, கொரியாவின் கோபல் கிரீன் நிறுவனத்தை சேர்ந்த ப்ரான்க் ரிஜ் ஸ்பேர்மன்ட் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர்.
ஐக்கிய அமெரிக்க உதவித் திட்டத்தின் அனுசரணையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருப்பதுடன் அவர்களின் ஆய்வுகள், நடைமுறை செயற்பாடுகள், வெளிக்கல கற்கை அறிக்கைகள் என்பன சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இத்துறையில் புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ளல், மேலும் கூடுதலானோரை ஈடுபடுத்த செய்தல் என்பவற்றை ஊக்குவிக்கும் வழிமுறைகள் தொடர்பாகவும், நிபுணர் குழுக்கல் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்படுகின்றது.
மேலும், மழை நீரை சேகரிப்பது தொடர்பான தேசிய சர்வதேச நிபுணர்கள் மத்தியிலான உறவை வழுப்படுத்துவதை நோக்காக கொண்டு நடாத்தப்படும் இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரழுக்கு 'வர்~h' எனப்படும் குறுந்திரைப்பட விழாவும், நடை பவணியொன்றும் உட்படுத்தப்படுத்தப்பட்டிருப்பதுடன் மழை நீரில் காணப்படும் ஆரோக்கியம் மற்றும் ஆபத்து நிலைமைகள், மழை நீரும் சுற்றாடலும், இப்பணியில் கூடுதலான மக்களை ஈடுபடுத்த செய்தல் முதலான விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளன.
இந்த மாநாட்டின் ஓர் அங்கமாக குறிப்பிடப்பட்டுள்ள குறுந்திரைப்பட விழாவும் நடைபவணியும் நவம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -