சவளக்கடையில் சட்டவிரோதமாக ஆற்று மண் ஆகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர்கைது

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
வளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்ட பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றிசட்டவிரோதமாக ஆற்று மண் ஆகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர்கைது செய்யப்பட்டுள்ளதுடன்,இதற்காக பயன்படுத்திய ஒரு உழவுஇயந்திரமும், ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சவளக்கடைபொலிஸார் தெரிவித்தனர்.

சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சவளக்கடைபொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம் தலைமையிலானகுழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நாவிதன்வெளிபிரதேசத்தினை சேர்ந்த ஒரு உழவு இயந்திரமும் சம்மாந்துறையைபிரதேசத்தினை சேர்ந்த ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்அதனுடன் தொடர்புடைய இரு நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு நபர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள இரு வாகனங்களையும் சம்மாந்துறை நீதவான்நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -