பல முக்கிய சம்பவங்கள் குறித்தான விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்தவர் நிஷாந்த.இடமாற்றத்தை வழங்கி 24 மணி நேரத்திற்குள் மீளப் பெற்றார் ஐ ஜீ பி . பொலிஸ் ஆணைக்குழுவுக்கு விளக்கமளிக்கவும் கேட்கப்பட்டுள்ளார் .
குறித்த இந்த இடமாற்றமானது நேற்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்கே இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது.
நிஷாந்த சில்வா கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம், லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட விவகாரம், வஷீம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் விவகாரம் உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.( இடமாற்றம் செய்யப்பட்ட மற்றும் இடமாற்ற ரத்து ஆணை ஆவணங்கள் இணைப்பு )