மீலாத் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை காஸிபுல் உலூம் மதிர்ஸா மற்றும் சம்மாந்துறை மர்கஸுத் தஹ்லீமில் ஹரமைன் அஹதியா பாடசாலை மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த கலாச்சார நிகழ்வு மதிர்ஸா வளாகத்தில் அதிபர் ஏ.எல்ஜெஸீமா தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் அம்பாரை மாவட்ட முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர் மௌலவி ஏ.சுபைதீன், அம்பாறை மாவட்ட அஹதியா பாடசாலைகள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி யு.எல் றிபாயுடீன், அம்பாறை மாவட்ட அஹதியா பாடசாலைகள் சம்மேளனத்தின் செயலாளர் எ.எம்.மன்சூர், வை.எம்.எம்.ஏ சம்மாந்துறை கிளையின் தலைவரும் ஹரமைன் அஹதியா பாடசாலை அதிபருமான மௌலவி எம்.எம்.எம் யாஸீன், குர்ஆன் மத்ரஸா சம்மேளன தலைவர் மௌலவி யு.எல்.ஸலா{ஹதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது குர்ஆன் மதிர்ஸாவில் ஓதிமுடித்து மாணவர்கள் மற்றும் பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தர்மச்சாரியா பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும் நினைவுச் சின்னம், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.