நாடாளுமன்றத்தை கலைத்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுகிறார் மைத்திரி???


நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக தன்னால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்தான அடுத்தக்கட்ட விசாரணைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் சார்பில் வாபஸ்பெறும் முடிவை உயர்நீதிமன்றத்தில் அறிவிக்ககூடும் என தெரியவருகின்றது.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்றே உயர்நீதிமன்ற தீர்ப்பு அமையும் என சட்ட நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ள நிலையிலேயே, தமது உத்தரவை வாபஸ்பெற மைத்திரி முடிவெடுத்திருக்கலாம்  என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -