கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை உப தபாலகம் இவ்வாண்டுக்கான அதிக வருமானமீட்டிய தபாலகமாக கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக அதன் உப தபாலதிபர் எம்.எஸ்.எம்.அஸ்ரப் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் உப அஞ்சல் அலுவலகங்களுக்கிடையில் இடம்பெற்ற தெரிவின் போதே அதிக வருமானமீட்டிய உப அஞ்சல் அலுவலமாக மாவடிச்சேனை உப அஞ்சல் அலுவலகம் இவ்விருதினைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
குறித்த உப தபாலகம் முதலிடம் பெற்றமைக்கான விருது அதன் உப தபாலதிபர் எம்.எஸ்.எம்.அஸ்ரப் அவர்களுக்கு மட்டக்களப்பு தேவநாயக மண்டபத்தில் வைத்து நேற்று 11ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
இவ்விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் அஞ்சல்மா அதிபதி மற்றும் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபதிகள் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

