
குவைத் உள்துறை அமைச்சகம் குவைத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த வாரத்தில் பெய்த பலத்த மழைக்கு பிறகு குவைத்தின் பல பகுதிகளில் கன்னிவெடிகள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட மண்ணில் புதைந்து கிடந்த பல வெடிபொருட்கள் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனவே பாலைவன பகுதியில் வேலை செய்யும் மற்றும் பொழுதுபோக்கு செல்லும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க பாதுகாப்பு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இந்த வெடிபொருட்கள் கடந்த 1990 களில் நடந்த ஈராக் குவைத் போரின் போது மண்ணில் புதையுண்ட வெடிபொருட்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அதிகமான அழைப்புகள் Jahra மாகாணத்திலிருந்து வந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இப்படிப்பட்ட சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதாவது உங்கள் கண்ணில்பட்டால் உடனடியாக அவரச உதவி எண்ணுக்கு அழைக்க அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.