மக்கள் சேவையை விரும்பாத ஒரு கட்சிக்கு தங்கள் தலைவிதியை தாரைவார்த்து கொடுத்துவிட்டு தடுமாறுகிறது தமிழினம்


எஸ்.அஷ்ரப்கான்-
க்கள் சேவையை விரும்பாத ஒரு கட்சிக்கு தங்கள் தலைவிதியை தாரைவார்த்து கொடுத்துவிட்டு தடுமாறுகிறது தமிழினம். இந்நிலை மாற்றப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், கரையோரப் பிரதேச இணைப்பாளருமான பி.எச்.பியசேன தெரிவித்தார்.
கல்முனை தொகுதியின் நீலாவணை பிரதேசத்தின் சமூக நலன் விரும்பிகள் பியசேனவின் அக்கரைப்பற்று காரியாலயத்தில் நேற்று (03) சனிக்கிழமை சந்தித்தனர்.
எதிர்காலத்தில் பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவளிப்பதன் மூலம் அபிவிருத்திகளை கல்முனை பிரதேசத்தில் எப்படி மேற்கொள்ளலாம் என்று கலந்துரையாடியதுடன் நீலாவணைப் பிரதேசத்திற்கான அமைப்பாளர் நியமிப்பது சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
இவர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போது உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன மேலும் அங்கு குறிப்பிடும்போது,
மக்கள் சேவையே மகேசன் சேவையென்று ஞானிகள் கூறும் பொழுது அதை தான் உண்மை என்று உறுதிப்படுத்தினார்கள் அரசியல் அறிஞர்கள், இன்றோ மக்கள் சேவையை விரும்பாத ஒரு கட்சிக்கு தங்கள் தலைவிதியை தாரைவார்த்து கொடுத்துவிட்டு தடுமாறுகிறது தமிழினம்.கண்ணியமான வீட்டில் பிறந்த மணமகன் தாசி வீட்டில் திருமணம் முடித்தது போல் அவலமான நிலை.மற்றைய இனங்களைப் போல் வளர்ச்சியையும், அபிவிருத்தியையும், உயற்சியையும் கண்டு ஏங்கி பரிதவித்து எப்பொழுது எமது இனம் மற்ற இனங்களை போல் வளர்ச்சிப் பாதையில் முன்னேறும்மென சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் காலத்திற்கு காலம் ஏமாற்றப்படும் இனமாகவே இருந்து கொண்டிருக்கிறது எம் இனம்.இதற்கு காரணம் கபடத்தனம் நிறைந்த சுய நல எண்ணம் கொண்ட தமிழ் இனம் கறுவருக்கப்பட வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் சதிகாரர்களின் மாய வலையில் விழுந்து மதியை இழந்து ஈழம் தேசியம் என்று பசப்பு வார்த்தைகளின் பின்னால் கால் பிடரியில் அடிபட ஓடிக் கொண்டிருக்கிறது.என்று தனியும் இந்த அபிவிருத்தி தாகம்.இன்று எமது இனம் மரணத் தருவாயில் இருப்பவன் பிசத்துவது போல் புலம் பிக்கொண்டிருக்கிறது அபிவிருத்தியை எண்ணி, விரல் விட்டுக் எண்ணக்கூடிய நிமிடங்களுக்குள்ளே வெவ்வேறு விதமாக தமிழ் மக்களுக்கு காலத்துக்கு காலம் பொருத்தமில்லாத வாக்குறுதிகளை கொடுத்து வெறுமெனே காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது.
நாடு பற்றி எறிந்து கொண்டிருக்கும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம் என்பார்கள்.நல்லாட்சி அரசு அமைப்பதற்கு துணையாக நின்று தங்களது தேவையை பூர்த்தி செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தாங்கள் பெற்ற பதவிக்காக மட்டுமல்ல பெற்றுக்கொள்ளும் சம்பளத்திற்காவது பதவிகளைப் பெற்று மக்களுக்கு சேவை செய்ய முன் வர வேண்டும்.

நெருப்பை திண்பவன் கரியாய் பேழ்வான் என ஒரு கிராமத்து பழமொழி இருக்கிறது.காலத்திற்கு காலம் பொருத்தமில்லாத கருத்துக்களை கூறி மக்களை மயக்கி வாக்குகளைப் பெற்று தாங்கள் மட்டும் சுக போகங்களை அனுபவித்துக் கொண்டு ஏழை எளிய மக்கள் எதையும் பெற முடியாமல் தடையாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சந்ததியை இந்த மக்களின் கண்ணீரே மூழ்கடிக்கும்.அமைச்சுப் பதவிகளைப் பெற்று மக்களுக்கு சேவை செய்ய சொன்னால் நாங்கள் சோரம் போக மாட்டோம் என வீம்பாக பேசும் வீணர்கள் நிறைந்த அமைப்பாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு காணப்படுகிறது.இவர்கள் அரசியல்போர் செய்து சாதித்தது எதுவும் இல்லை.ஆயுதப் போர் செய்து சாதித்தது எதுவும் இல்லை.அறப் போர் செய்து சாதித்ததும் எதுவும் இல்லை.அதனால் தங்களது குடும்பங்களுக்கு மட்டும் பெருமைகளை பெற்றுக் கொண்டனர்.தந்தை செல்வா, தளபதி தர்மலிங்கம்,அண்ணன் சேனாதிராஜா,தம்பி பிரபாகரன் என பெருமையான பெயர்களை பெற்றார்களே தவிர எம் இனத்திற்கு செய்தது எதுவும் இல்லை.

எனவே இவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் அடைந்த நன்மை எதுவும் இல்லை.ஜனாதிபதி கூறுகிறார் ரணில் பிரதமரானால் ஒரு நேரமும் பதவியில் இருக்கமாட்டேன் என்று.அவர் மீண்டும் கூறுகிறார் வடக்கு கிழக்கு இணைப்பு சமஷ்ட்டி என்னை கொண்டாலும் கிடையாது என்று கூறுகிறார்.சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் நான் பாரளுமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முதன் முதலாக சந்தித்த பொழுது கூறினார் பிரபாகரன் கேட்ட எதையும் தரமாட்டேன் வேறு எதுவேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றார்.அன்றே பதினான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சுப் பதவிகளைப் பெற்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அனைத்துப் போராளிகளுக்கும் அளப் பெரிய சேவையை செய்திருக்கலாம்.அரசியல் கைதிகளையும் விடுதலை செய்திருக்கலாம்.அவர்களுக்கு அவ்வாறு செய்ய வேண்டிய விருப்பமும் இல்லை தேவையும் இல்லை அதைப்பற்றி கவலையும் இல்லை.அதன் பின் வந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டும் பதினொரு உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டும்.ஏழு உறுப்பினர்களை கொண்ட முஸ்லீம் காங்கிரசிற்கு முதலமைச்சர் பதவியை கொடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்கள் இயலாமையை வெளிக்காட்டிருந்தனர்.கல்வி விவசாய அமைச்சுக்களை அலங்கரித்திருந்தனர்.
அதன் பின் வந்த பாராளுமன்ற தேர்தலில் பதினாரு பாராளுமன்ற உறுப்பினர்களைப்பெற்று ஒன்றுக்கும் உதவாத எதிர்கட்சித் தலைவர் பதவியை பெற்று அவர்களது வயிற்றை வளர்த்தனர். ஆனால் இப்பொழுது மஹிந்த ராஜபக்ச எனும் மாபெரும் மனிதனக்கு கிடைத்த இறைவனின் அருள் பார்வையால் தமிழ் தேசிய கூட்டமைப்பை நோக்கி அணி திரளும் அமைச்சுப் பதவிகளைப் பெற்று மக்களுக்கு சேவை செய்ய முடியா விட்டால் அட மூடர்களே இன்னும் தமிழினத்தை நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? தமிழினத்தின் இளைஞர்கள், யுவதிகள், தாய் தந்தையர்கள் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் பொழுது உங்களுக்கு வாக்களித்த மக்கள் பதறும் நிலைமையை கண்டு மனம் வருந்தாமல் பாராளுமன்ற பதவிகளை வைத்து பந்தாடிக்கொண்டு இருக்கிறீர்கள். தமிழினத்தையே கருவறுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -