இலங்கை பாராளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் மேற்கத்தேய நாடுகளுக்கு அதிக வலியை ஏற்படுத்தியுள்ளது.


லங்கை பாராளுமன்றில் ஏற்பட்ட குழப்பம்மேற்கத்தேய நாடுகளுக்கு அதிக வலியைஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்திம் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றஅவர், அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துதெரிவித்த போதே இவ்வாறு கூறினர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;
அவர்களது நாட்டு பாராளுமன்றில் இடம்பெறும்இதுபோன்ற வன்முறைகள் குறித்து வாய்திறக்காததூதுவர்கள், இலங்கை விடயம் என்றவுடன்முண்டியடித்து கருத்து வெளியிடுவதாக வும்குற்றம் கமத்தினார். தங்களது பிரச்சினைஉலகிலுள்ள எல்லா நாடுக ளிலும்இடம்பெறுகின்றன.ஆனால் இலங்கையில்ஏற்படும்போது மாத்திரம் சில மேற்கத்தேய நாடுகளுக்கு வலிக்கிறது.
அவர்களது நாடுகளின் பாராளுமன்றத்திற்குள்இவ்வாறான குழப்பங்கள், சண்டைகள்இடம்பெறும் போது,அந்தந்த நாட்டு தூரதுவர்கள்கருத்துக்கள் எதனையும் வெளியிடுவதில்லை.
இலங்கை பாராளுமன்றத்தின் செயற்பாடுகள்குறித்து கவலையடைவதாக சில மேற்கத்தேயநாட்டு தூது வர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.கடந்த காலங்களில் அவர்களின் நாடாளுமன்றஅமர்வுகளிலும் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன.அதன் போது,அவர்கள் அமைதியாகஇருந்தனர்.

பாராளுமன்றத்திலிருந்தாலும், வெளியில் இருந்தாலும் நாம் எல்லோரும் மனிதர்கள்.அவ்வப்போதுசில அசம்பாவிதங்களும் ஏற்படும்.என்றபோதிலும்225 உறுப்பினர்களும் எந் தவொரு சம்பவத்தையும்அனுமதிப்பதில்லை.எனினும் பாராளுமன்றில்சபாநாயகரின் பிழையான செயற்பாடுகளினால்,சில அரசியல் தீர்மானங்களை எடுக்கும் போது,தமது ஆவேசத்தை கட்டுப்படுத்த முடியாமல்போகும் சந்தர்ப் பங்களும் உண்டாகும்.
சபாநாயகர் சரியாக செயற்பட்டு, நிலையியற்கட்டளைக்கு அமைய செயற்பட்டு பாராளுமன்றசம்பிரதாயங்களைப் பாதுகாப்பாராயின்இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாது என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -