அங்கே..! நாளையும் சண்டை நடக்குமா..?

எச்.எம்.எம்.பர்ஸான்-

லங்கையின் சமகால அரசியல் தொடர்பில் தேசியத்திலும் சர்வதேசத்திலும் பேசும்பொருளாகக் காணப்படுவதை நாம் அனைவரும் அறியக் கூடியதாகவுள்ளது. அந்தளவுக்கு இலங்கை நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையும் பாராளுமன்ற அமர்வுகளும் காணப்படுகின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தினால் நாடு கொந்தளிப்பில் காணப்படுவதை பச்சிளம் பாலகர் முதல் வயதான பாட்டன் வரைக்கும் மிகத் தெளிவாகவும் கூர்மையாகவும் அறிந்து வைத்திருப்பதை தெரிந்துகொள்ள முடிகின்றது.

அந்த வகையில்தான் ஜனாதிபதி தன்னிச்சையாக முடிவெடுத்து ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்சவை நியமித்தார் அத்தோடு பாராளுமன்றத்தையும் கலைத்து விட்டார் அதன் பின்னர் ஒன்றிணைந்த எதிர்த் தரப்பினர் நீதி தேடி நீதிமன்றத்தை நாடியிருந்தனர் நீதிமன்ற உத்தரவின் படி பாராளுமன்றம் கடந்த 14 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் தலைமையில் கூடியபோது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகள் நிலையைக் கருத்திற் கொண்டு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு 16 ஆம் திகதி மீண்டும் கூடப்பட்டது.

அன்றைய தினம் சபாநாயகர் பாராளுமன்றத்திற்குல் வருவதற்கு முன்னரே அவருடைய ஆசனத்தை ஆலும் தரப்பினர் ஆக்கிரமித்து தங்களுடைய கட்டுப்பாட்டுக்குல் கொண்டு வந்திருந்தனர் அதைத் தொடர்ந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சபைக்கு வருகைதந்த சபாநாயகர் மீதும் பொலிஸார், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் கொலைவெரித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமற்றத்திக்கு அனுப்பி மக்களின் தேவைகளை வென்றெடுப்பதற்காக பொதுமக்கள் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்து உடைமைகளை இழந்து அத்தோடு விலை மதிக்க முடியாத உயிர்களை இழந்து மிகுந்த தியாகத்துக்கு மத்தியில் அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காமல் அரசியல் சட்டதிட்டங்களை கவனத்திற் கொள்ளாமல் தான்தோன்றித் தனமாக செயற்படுவதை இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் தங்களுடைய பெரும்பான்மையாக ஒருமித்த கருத்துக்களை தெரிவித்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது.

பொதுவாக நாட்டு மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும் நன்மதிப்பும் குறைந்து அவர்கள் அடாவடித்தனமும் அட்டூழியமும் செய்கின்றவர்கள் என்றவொரு பார்வையை பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் காண்பித்துள்ளனர்.

இதுவரை காலமும் மக்கள் மத்தியில் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நன்மதிப்பும் இல்லாமற் செய்து அவர்களுடைய பதவிகளையும் இருப்புக்களையும் தக்கவைத்துக் கொள்ள அவர்கள் எது வேண்டுமென்றாலும் செய்வார்கள் என்று பொதுமக்களின் ஏகோபித்த கருத்தாக அமைகின்றது.

அந்த வகையில்தான் நாளையும் பாராளுமன்றம் கூடப்படவுள்ளது அந்த அமர்விலும் நமது நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பழைய பல்லவியைப் பாடுவார்களா இல்லை ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து இந்த நாட்டின் கௌரவத்தைக் கட்டிக் காப்பார்களா என்று அனைத்து மக்களும் மிகுந்த எதிப்பார்ப்புக்களுடன் நாளைய தினத்தை எதிர்பார்த்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -