பிரபல இரசாயனவியல் ஆசிரியை நேசராணி காலமானார்.!

காரைதீவு  சகா-

ல்முனை கார்மேல் பாத்திமாக்கல்லூரியின் ஓய்வுநிலை சிரேஸ்ட இரசாயனவியல் ஆசிரியை செல்வி தங்கராஜா நேசராணி (18) அதிகாலை காலமானார்.


காரைதீவைச் சேர்ந்த இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது விஞ்ஞானமாணிப்பட்டத்தைப் பூர்த்தி செய்து இறுதிவரை கல்முனை கார்மேல் பாத்திமாக்கல்லூரியில் கற்பித்துவந்தார்.


காரைதீவு தங்கராஜா நேசம்மா தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியான இவர் எமது சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜாவின் மைத்துனியுமாவார்.


அவரால் உருவான பலநூறு வைத்தியர்களும் பொறியலாளர்களும் கல்வியியலாளர்களும் அவரது கற்பித்தலுக்கு சாட்சி என திறந்த பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும் அவருடன் அன்று கற்பித்தவருமான கே.ஞானரெத்தினம் தெரிவித்தார்.


நாளை (20) செவ்வாய்க்கிழமை பகல் 3மணிக்குகாரைதீவு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுமமென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -