கல்முனை அல்-ஹாமியா அரபிக் கல்லூரியில் 2019ஆம் ஆண்டில் கல்வி கற்பதற்காக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக கல்முனை அல்-ஹாமியா அரபிக் கல்லூரியின் அதிபர் மௌலவி ஏ.சீ.தஸ்தீக் (மதனி) தெரிவித்தார்.
ஹிப்ழுல் குர்ஆன் பிரிவு மற்றும் ஷரீஆப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளுக்கு ஆண் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். ஹிப்ழுல் குர்ஆன் பிரிவில் கல்வி கற்பதற்கான தகைமையாக பாடசாலை கல்வியில் 6ஆம் தரத்தில் சித்தியடைந்திருப்பதுடன் 12 வயதிற்குட்பட்டவராகவும், அல்-குர்ஆனை திருத்தமாக ஓதக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும் எனவும், ஷரீஆப் பிரிவில் கல்வி கற்பதற்கான தகைமையாக பாடசாலை கல்வியில் 9ஆம் தரத்தில் சித்தியடைந்திருப்பதுடன் 14 வயதிற்குட்பட்டவராகவும், அல்-குர்ஆனை திருத்தமாக ஓதக்கூடியவராகவும், பாடசாலை முன்னேற்ற அறிக்கை திருப்திகரமாகவும் இருத்தல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கல்முனை அல்-ஹாமியா அரபிக் கல்லூரியில் 2019ஆம் ஆண்டில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 2018.11.30 ஆம் திகதிற்கு முன்னர் பெற்று அதிபர், அல்-ஹாமியா அரபிக் கல்லூரி, வாடி வீட்டு வீதி, கல்முனை எனும் முகவரிக்கு விண்ணபிக்குமாறும், நேர்முகப் பரீட்சை டிசம்பர் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெறும் எனவும், விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பபடிவத்தில் குறிப்பிடப்பட்ட ஆவணங்களுடன் குறித்த தினத்திற்கு சமூகமளிக்குமாறும் கல்முனை அல்-ஹாமியா அரபிக் கல்லூரியின் அதிபர் மௌலவி ஏ.சீ.தஸ்தீக் (மதனி) தெரிவித்தார்.
மேலதிக விபரங்களுக்கு 0772370520, 0773063818 ஆகிய தொலை பேசி இலகங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
1979ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியில் இதுவரை 290ற்கு மேற்பட்ட உலமாக்கள் கல்வி கற்று தமது உயர் கல்வியை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கழகங்களில் பயின்று பட்டங்களை பெற்று நாட்டின் பல பாகங்களிலும் மார்க்க கல்வியை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.