ஜனாதிபதிக்கு ஒரு கடிதம்....

பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் இலங்கையர்களாகிய நாம் இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து எமது கவலையை வெளிப்படுத்துகிறோம்.பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை பதவியிலிருந்து உடனடியாக அகற்றி, அவரிற்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களைப் பிரதமராக நியமித்தமை அரசியல் அமைப்புச் சதி எனக் கருதுகிறோம்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசிலிருந்து விலகியதும், பாராளுமன்ற நம்பிக்கையையும், பலத்தையுமுடைய கட்சியை வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திருந்தால் அம் முடிவை நியாயமாகக் கொள்ளலாம். பதிலாக நீங்கள் புதிய மந்திரி சபையை நியமித்ததோடு தன்னிச்சையாகவே பாராளுமன்றச் செயற்பாடுகளையும் ஒத்திப் போட்டதுடன் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ போதுமான பாராளுமன்றப் பலத்தைத் திரட்டும் வகையில் கால அவகாசத்தையும் வழங்கியுள்ளீர்கள். இதன் காரணமாக இரண்டு பிரதமர்கள் போட்டியிடும் அதிகார மையங்கள் உருவாக இடமளித்துள்ளீர்கள். இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி இதனால் ஏற்பட்டுள்ளது.

புதிய பிரதமர் நிதி அமைச்சினைப் பொறுப்பேற்ற வேளையில் நீங்கள் சட்டம் ஒழுங்கு, ஊடகம், அரச அச்சகம் என்பவற்றை உங்கள் பொறுப்பில் எடுத்ததுடன் பொலீஸ், ஊடகம் ஆகியவற்றின் மீதும் கட்டுப்பாட்டினை மேற்கொண்டுள்ளீர்கள். இதன் காரணமாக அரச இயந்திரம் யாவற்றையும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கடத்த முயற்சித்துள்ளீர்கள்.பாராளுமன்றத்தைக் கூட்டும்படி விடுத்த வேண்டுகோள் அனைத்தையும் நீங்கள் அலட்சியப்படுத்தியதோடு அரசியல் அமைப்பிற்கும், ஜனநாயத்திற்கும் விரோதமாக பாராளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலை நடத்தத் தீர்மானித்தமையும் உங்கள் திட்டங்களை நிறைவேற்ற பாராளுமன்றப் பெரும்பான்மை உங்களிடம் இருக்கவில்லை என்பது வெளிப்படையாக நிருபணமாகியது.

திரும்பத் திரும்ப உங்கள் வரைமுறைகளை மீறி நிறைவேற்று அதிகாரத்தினைத் துஷ்பிரயோகம் செய்வதும், மக்கள் ஆணையை மீறுவதும் மிகவும் வெளிப்படையாகவே நீங்கள் அரசியல் யாப்பினை மீறுவது சட்டம் மற்றும் ஜனநாயக நெறியினை மீறுவதாகவே கருதப்பட வேண்டி உள்ளது.இவ்வாறான ஜனநாயக விரோத, யாப்பு விதிகளை மீறிச் செயற்படுவதை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். நிலைமைகள் மேலும் மோசமடைந்து நெருக்கடியை நோக்கிச்செல்லும் போக்கினைத் தடுக்கும் விதத்தில் , அக்டோபர் 26ம் திகதிக்கு முன்னதான நிலமைகளுக்கு எடுத்துச் செல்ல உதவுமாறு வேண்டுகிறோம்.

பிரதமர் ரணில் விக்கரமசிங்க அவர்கள் இப் பிரச்சனைகளின் பங்காளியாக உள்ள நிலையில் அவரது எதிர்காலம் என்பதை விட எமது கவலைகள் நாட்டின் ஜனநாயகத்தினதும், மக்களினதும் எதிர்காலம் குறித்தே கவலை கொள்கிறோம். இலங்கையின் ஜனநாயகக் கட்டுமானம் என்பது ஆசியாவில் மிகவும் பழமை வாய்ந்தது என்பதுடன் அவ்வப்போது இடையூறுகள் நேர்ந்த போதிலும் அதிகார மாற்றம் என்பது எப்போதும் அமைதியாகவே கைமாறப்பட்டது என்பதை ஞாபகமூட்ட விரும்புகிறோம். இந் நிலையில் இதேபோல் நாட்டின் அரசியல் யாப்பினை மிகவும் அப்பட்டமாகவே அவமதிக்கும் நிலை இதுவென சுட்டிக் காட்ட விரும்புகிறோம்..

தற்போதைய நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட நீங்கள் உதவவில்லை எனில் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக மோசமான தலைவராகவே நீங்கள் கருதப்படும் நிலை உள்ளது. இந்த அவமானகரமான நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த உதவும் ஜனநாயக சக்திகளோடு நாமும் இணைந்து செயற்படுவோம் என்பதனையும் வலியுறுத்துகிறோம்.
---------------------------------------------------------

ஐக்கியத்திற்கான சுயாதீன சிவில் சமூகம்

——————————————-

Mr. Maithiripala Sirisena
The President
Democratic Socialist Republic of Sri Lanka
Presidential Secretariat
Galle Face
Colombo 01

Mr. President

We, the expatriate Lankans living in the UK, wish to express our grave concern over the political developments unfolding in Sri Lanka.

We consider your action of suddenly ousting the Prime Minister Ranil Wickremasinghe and appointing the controversial former President Mahinda Rajapaksa as a constitutional putsch.

Even if the removal and appointment were justified after the SLFP had pulled out from the government, the next step would have been to take a floor test to see who enjoyed the confidence of the house. Instead you have appointed a new cabinet and unilaterally prorogued Parliament to give newly-appointed PM Rajapaksa time to muster enough support. It resulted in two incumbent Prime Ministers and two competing power centers, first time in Sri Lanka, and instigated the unprecedented political and economic turmoil in the country.

Whilst the new-PM took finance Ministry you have brought law and order, media and government press under your purview. Concerted efforts were taken to bring media and police under your control. Attempts are being made to smuggle the entire state machinery into your fold.

You ignored all calls to reconvene parliament and went ahead with a clearly undemocratic and unconstitutional move to dissolve Parliament and call for elections when it was proved that you did not have the parliamentary majority to pursue your own agenda.

In this manner you have repeatedly overstepped your limits by abusing your executive power, subverting the mandate given by the people, and flagrantly violating the constitution, ethics laws and democratic norms.

We vehemently condemn your undemocratic and unconstitutional actions and urge restoration of status quo prevailing prior to October 26th to stop worsening the situation further.

Our concern is not about the plight of Mr. Ranil Wickremasinghe, who is also part of the problem, but the people and democracy of the country.

We wish to remind you that, our country has the reputation of being one of the oldest democracies of Asia and, however flawed, there have always been peaceful transfers of power. That is now changing because, never before has it so blatantly disrespected its own constitutional norms.

If this situation is not rectified forthwith, we warn, you will go down in history as the worst leader ever Sri Lanka has had and we will join hands with all democratic forces to stop this dangerously shameful development.

—————————///—————-/

Independent Civil Society for Unity
Contact Email: info.icsu@gmail.com

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -