அப்துல்சலாம் யாசீம்-
முள்ளிவாய்க்காலுக்கு பின் தமிழ் மக்கள் ஆதரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு சம காலத்திலே நலிந்து காணப்படுகின்றது.கட்சியின் உள்ளவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் உள்ளதால் பலர் வெளியே வந்துள்ளனர்.எனவே 1975 முதல் தாயக உரிமைக்காக பேராடிய எமது கட்சியின் தோழர்களை ஒருங்கமைத்து ஈரோஸ் அமைப்பு இன்று மீண்டும் மீளாளுமை பெற்றுள்ளது. என ஈரோஸ் அமைப்பின் கிழக்கு மாகாணத்தின் இணைசெயலாளர் இரா.இராஜேந்திரா தெரிவித்தார்.
ஈழப் புரட்சி அமைப்பின் (ஈரோஸ்) மிளாளுமை பொதுச் சபைக் கூட்டம் நேற்று மாலை 28ம் திகதி மூதூர் கிழக்கு ,சூடைக்குடாவில் இடம் பெற்றது.இதில் பேசும் போது இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து தேசியத்திற்கான குரலை உறுதியாக ஒழிக்க விடுமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நாம் இன்று எமது அமைப்பை மீள ஆரம்பித்துள்ளோம்.
ஆயினும் கடந்த பல தேர்தல்களில் எமது கட்சியினர் பல தோழர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைத்து பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் வெற்றி பெறச் செய்து தேசியத்தின் குரல் நலிந்து போகாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்தே நாம் செயற்பட்டுக் கொண்டிருந்தோம்.
ஆயினும் இன்று தமது கட்சியில் உள்ளவர்களை சுயமாக செயற்படுத்த விடாமல் கட்டுப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கின் காரணமாகவே நாம் மூன்றாவது அணியாக வெளியில் வந்து செயற்பட வேண்டியுள்ளது.எமது செயற்பாடுகள் தேர்தலை மையப்படுத்திதாகவோ பட்டம் பதவிகளை மையப்படுத்திதாகவோ இல்லாது ஆரம்ப காலத்தில் ஈரோஸ் அமைப்பு எங்களை எந்த வகையில் பயிற்றுவித்ததோ மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை அடி மட்டத்தில் சென்று தீர்க்க முனையும் செயற்பாட்டையே நாம் செய்யப்போகின்றோம் என்றார்.என இரா.இராஜேந்திரா தெரிவித்தார்.
இதன் போது வடமாகாணத்திற்கான இணைச் செயலாளர் அருளப்பு எட்வட் இராசநாயகம் மற்றும் மலையகத்திற்கான இணைச் செலாளர் ஜீவன் ராஜேந்திரன் மற்றும் திருகோணமலைக்கான நிர்வாகிகளான க.திருச்செல்வம் சு.இராசதுரை செ.தர்மலிங்கம் சு.கமலச்சந்திரன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

