தான் செயல்திறன் அற்றவர் என்பதை நாட்டுமக்கள் முன்னிலையில் ஜனாதிபதி ஒத்துக்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று திங்கள்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறுப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
ஜனாதிபதியின் உரைபற்றி கூறுவதுக்கு ஒன்றுமில்லை. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ச மீது சுமத்திய குற்றச்சாடுகளுக்கு நிறப்பூச்சு பூசி மீண்டும் அதை ஐக்கிய தேசிய கட்சி மீது பூச முயற்சி செய்துள்ளார்.
சுகாதார அமைச்சராக உள்ளபோது அப்போதைய ஜனாதிபதி என்னை மக்களுக்காக பணியாற்ற விடவில்லை என அன்று கூறினார். இன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான பின்பும் ஐக்கிய தேசிய கட்சி என்னை மக்களுக்காக பணியாற்றவிடவில்லை என கூறுகிறார். ஆகவே தான் செய்திறன் அற்றவர் என்பதையே மறைமுகமாக மக்களுக்கு கூறியுள்ளார்.
மத்திய வங்கி கொள்ளை பற்றி கூறும் ஜனாதிபதி தனது ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாட்டை கொள்ளையடித்தவர்கள் என குற்றம்சாட்டியவருக்கே பின்கதவால் பிரதமர் பதவியை வழங்கி உள்ளது வேடிக்கையானது.
இந்த உரை தொடர்பாக எமது கட்சியின் உத்தியகபூர்வ பதிலை விரைவில் வழங்குவோம் என தெரிவித்தார்.
