மஹிந்தானந்தவின் வழக்கு ஒத்திவைப்பு


பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது.

இருப்பினும் நீதிபதி இன்று விடுமுறை என்பதால், குறித்த வழக்கை நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க கொழும்பு மேல் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.ஏ.ஆர் ஹெய்யன்துடுவ உத்தரவிட்டுள்ளார்.
மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபா பணத்தைப் பயன்படுத்தி பொரள்ளை - கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -