சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் விசேட மருத்துவ முகாம்

அஸ்லம் எஸ்.மௌலானா-
சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அனுசரணையுடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட மருத்துவ முகாம் இன்று செவ்வாய்க்கிழமை (23) இப்பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பாடசாலை முகாமைத்துவ சபை என்பவற்றின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைஸால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இம்மருத்துவ முகாமை ஆரம்பித்து வைத்தார்.

அஷ்ரப் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களான டாக்டர் எம்.எஸ்.எம்.மாஹிர், டாக்டர் ஜெஸீலுல் இலாஹி, டாக்டர் முஹம்மட் நியாஸ் உட்பட தாதியர் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழுவொன்றும் இம்மருத்துவ முகாமில் பங்கேற்று, வைத்திய பரிசோதனை, ஆலோசனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட சுமார் 200 மாணவர்களுக்கு விசேட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. இம்மாணவர்களின் கண், காது, மூக்கு, தொண்டை, பல், வயிறு போன்ற அவயகங்களில் காணப்படும் நோய்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்பட்டது. இவ்வைத்திய முகாமுக்கு, சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் அழைக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் பரிசோதனைகள் இடம்பெற்றதுடன் வைத்திய ஆலோசனைகளும் மேலதிக சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளரும் பொறியியலாளருமான ஏ.எம்.சாஹிர் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்களும் சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு மருத்துவ முகாம் பணிகளில் ஈடுபட்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -