பெல்கன் கிறிக்கெட் விளையாட்டுக் கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வு


 அகமட் எஸ்.முகைடீன்-


ல்முனை பெல்கன் கிறிக்கெட் விளையாட்டுக் கழகத்தின் சீருடை (ஜேசி) அறிமுக நிகழ்வு கல்முனை இக்பால் கழக கேட்போர்கூடத்தில் வெள்ளிக்கிழமை (26) அவ்விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.எம். லாபீர் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து சீருடையினை அறிமுகம் செய்துவைத்த இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ஏ.எல்.எம். நைஸர் உள்ளிட்ட பெல்கன் கிறிக்கெட் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டனர்.


குறித்த விளையாட்டுக் கழகத்திற்கு பிரதி அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு முன்னதாக பிரதி அமைச்சரின் சொந்த நிதியிலிருந்து ஐம்பது ஆயிரம் ரூபா நிதியினை இதன்போது வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வின்போது பிரதி அமைச்சர் ஹரீஸின் சேவையினை பாராட்டி பெல்கன் கிறிக்கெட் விளையாட்டுக் கழகத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -