கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் பிரிவினால் அம்பாறை மாவட்ட முன்னாள் திட்டமிடல் பணிப்பாளருக்கு பிரியாவிடை நிகழ்வு



எஸ்.அஷ்ரப்கான்-
ம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி தற்போது வாலுவாதார அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சுக்கு பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ள எஸ்.அன்வர்தீனுக்கு கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு அபிவிருத்திஉத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு இன்று (15) சாய்ந்தமருது சீப் பிரீஸ் ஹோட்டலில் கல்முனை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.இராஜதுறை தலைமையில் நடைபெற்றது.
திட்டமிடல் பணிப்பாளர் அன்வர்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதோடு, வாழ்த்துப்பா,நினைவுச்சின்னம்,மற்றும் பரிசில்கள்,பொற்கிழி ஆகியன வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் இலங்கை நிர்வாக சேவையில்(SLAS) தரம் -01க்கு பதவி உயர்வு பெற்ற கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச் முகம்மட் கனி அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அத்துடன் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.இராஜதுரை மற்றும் கணக்காளர் யூ.எல்.ஜவாகிர் ஆகியோரின் சேவைகளை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு அனைத்து உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பூரண ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக  இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -