கல்முனைப் பிரதேசத்தில் பொல்லடி கலைத்துறையினை ஊக்குவிக்கும் பொருட்டு கல்முனைப் பிரதேச கலாசார அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொல்லடி பயிற்சி வழங்கல் வேலைத்திட்டத்தின், அங்குரார்ப்பன நிகழ்வு நேற்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
உலகக் கவிஞரும் கல்முனைப் பிரதேச கலாசார அதிகாரசபையின் பிரதித் தலைவருமான சோலைக்கிளி அத்தீக்கின் நெறிப்படுத்தளில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முஹமட் கனி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், கல்முனைப் பிரதேச கலாசார அதிகாரசபையின் பொருளாலர் ஏ.ஆர்.எம். சாலிஹ், செயலாளர் எஸ்.எல்.அஸீஸ், கலாசார உத்தியோகத்தர்களான அகிலா பானு, சிவ ஜோதி உட்பட பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரசபையின் நிர்வாகிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் வேலைத்திடத்தின் கீழ் கல்முனைப் பிரதேசத்தில்லுள்ள ஐந்து பாடசாலைகளின் மாணவக்குழுக்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளனர்.






