மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாகவே தொற்றல்லா நோய்கள் தோற்றுவிக்கப்படுகின்றன


பைஷல் இஸ்மாயில் -
தொற்று நோய்கள் குறித்து மக்கள் இன்று பீதிகொள்கின்ற போதிலும் தொற்றல்லா நோய்கள் இன்று மக்கள் மத்தியில் மிகவும் வேகமாகப் பரவி பயங்கர விளைவுகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாகவே தொற்றல்லா நோய்கள் தோற்றுவிக்கப்படுகின்றன என்பதே உண்மையாகும் என்று மெடிரெப்ஸ் மருத்துவ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எல்.ஜாபீர் சாலி தெரிவித்தார்.
தொற்று நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக தனது மருத்துவ நிருவனத்தினால் சீனி, குளோஸ்ட்ரோல் போன்ற பரிசோதனையுடன் பொதுமக்களுக்கான விழிப்புணர்வும் (16) அம்பாறை ஆலங்குளம் கிராமத்தில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தொற்றல்லாத நோய்களிடையே நீரிழிவு நோய் இன்று முதலிடம் வகிக்கின்றன. தற்போது இலங்கை சனத் தொகையில் 1/4 பங்கினர் நீரிழிவு நோய்க்கு பலியாகியிருக்கினர். ஆனால் 2050 ஆம் ஆண்டாகும்போது இந்த நோயின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படும் என்று சுகாதார ஆய்வின் அறிக்கை கூறுகின்றன.
இதற்கெல்லாம் ஒரு காரணமாக அமைவது, தவறான கணிப்புத்தரும் கருவிகளை நாம் பாவிப்பதேயாகும். அதன் மூலம் கிடைக்கின்ற தரவுகள் மிக பயங்கர விளைவுகளை எமக்கு உண்டுபன்னி விடுகின்றது. இவ்வாறு தவறான கணிப்புத்தரும் கருவி மூலம் எமது நீரிழிவு நோய் பற்றிய தரவுகளை அறிந்துகொள்ள நாம் முற்படுகின்றபோது ஒரு சுகதேகியாக இருக்கின்ற ஒருவரை நோயாளியாக்கவும், ஒரு நோயாளியை சுகதேகியாக்கவும் தரவுகள் கிடைக்கப்பெறுமாக இருந்தால் இதனைப் பாவிக்கின்ற அனைவரும் பாரிய பாதிப்புக்குள்ளாக வழி செய்து விடுகின்றது. இதனால் நாம் பாரிய சவல்களை எதிர்நோக்க வேண்டியவர்களாக மாறிவிடும் நிலைமைக்கு ஆளாகிவிடுகின்றோம்.

கடந்த காலங்களில் இந்த நோய்த்தாக்கம் வயது வந்தவர்களையே பாதித்து வந்ததுள்ளன. இன்று சர்வ சாதாரணமாக பாடசாலை மாணவர்களிடத்தில் இத்தாக்கம் அதிகரித்து வருகின்றது. பாடசாலை மாணவர்களில் 50 வீதமானவர்கள் நீரிழிவின் ஆரம்ப நிலையில் இப்பதாக வைத்திய தகவல்கள் சுட்டிக்காட்டி எச்சரிக்கின்றது. இந்நிலைமை தொடருமானால் எமது மாணவ சமூகம் ஒரு அபாயகரமான நிலைமைக்கு ஆளாக்கப்படுவார்கள். இதனை நாம் கட்டுப்படுத்த முயற்சிக்கவேண்டும். அவ்வாறு முயற்சிக்கா விட்டால் எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை ஒரு கேள்விக்குரியாகிவிடும் என்பதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமே இல்லை.

திடீர் தயாரிப்பு உணவு வகைகளுக்கு மனிதன் பழக்கப்பட்டமை, உடற்பயிற்சி, உடல் உழைப்பின்மை மற்றும் உளவியல் உளைச்சல் போன்ற காரணிகளினாலேயே பெரும்பாலானோர் தொற்றல்லாத நோய்களுக்கு பலியாகிக் கொண்டிருக்கின்றார்கள். இதில் நாம் மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கவேண்டும். அவ்வாறு நாம் முயற்சிக்காத வரை எமக்கு வருகின்ற நோயிலிருந்து ஒருபோதும் நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -