மன்னார் வேப்பங்குளம் முஹம்மதியா விளையாட்டுக் கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் முசலி ஹிறா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று சம்பியனானது.
கடந்த வாரம் வேப்பங்குளம் கரப்பந்தாட்ட திடலில் நடை பெற்ற இச்சுற்றுப் போட்டி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மன்னார் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் முசலி பிரதேசத்திற்கான இணைப்பாளருமான அல்-ஹாபிழ் எம்.ரி.எம்.வஸீம் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விறுதிச் சுற்றில் வேப்பங்குளம் முஹம்மதியா விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து முசலி ஹிறா விளையாட்டுக் கழகம் விளையாடியது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான் அவர்களும் கெளரவ அதிதியாக ஐ.எஸ். ஆர்.சி.நிறுவனத்தின் பணிப்பாளர் சமூக சேவகர் அல்ஹாஜ் மிஹ்ழார், விசேட அதிதிகளாக மன்னார் மாவட்ட இணைப்பாளர் தர்சீன், நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் றாசிக் பரீத், முசலி சிலாவத்துறை பொலீஸ் அதிகாரி ஆகியோரும் மற்றும் முசலி பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக சேவகர்கள், தொண்டர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள்,விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள், ஊர்மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட முசலி ஹிறா விளையாட்டுக் கழகத்திற்கான வெற்றிக் கிண்ணம் மற்றும் பரிசுப் பொதிகளை அதிதிகள் இங்கு வழங்கி வைத்தனர்.