மட்டக்களப்பு மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி மேயர் டீ.ஸ்ரீபவன் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவை இன்று (19) மட்டக்களப்பில் உள்ள ஆளுனர் விடுதியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மட்டக்கப்பு மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பிலும், சிறந்த அரச அதிகாரிகளைக் கொண்ட நிருவாக சேவைகளை மக்கள் பயன் பெற வேண்டும் தொடர்பிலான விடயங்களை ஆளுனர் இதன் போது மாநகர சபை மேயருக்கு தெரிவித்தார்.
சுற்றுலாத் துறை அபிவிருத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் முன்னேற்றமடைய செய்வதற்கான புதிய திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன .
இச் சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் திரு.மணிவண்ணன் அவர்களும் பங்கேற்றார்.