சாய்ந்தமருது அல் -- கமறூன் வித்தியாலயத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் ஆசிரியையான திருமதி என்.எம்.அலிகானின் சேவையைப் பாராட்டி இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில், முன்னாள் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஐ.எம்.இஸ்ஸடீன் பிரதம அதிதியாகவும் கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
வித்தியாலய அதிபர் எம்.ஐ. நிபாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் அதிபர் திருமதி எம்.எல்.கே.ஏ. அன்வர்,ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஏ. சஹுரூன் மற்றும் பாடசாலையின் ஆசிரிய ஆசிரியைகளும் கலந்து கொண்டதுடன் நிகழ்வில் திருமதி என்.எம்.அலிகான் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.