தாருஸ்ஸலாம் கல்லூாியில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு!!!

கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூாியில் புதிதாக நிா்மாணிக்கப்பட்ட கட்டிடம் 2018.09.19 ம் திகதி பிரதமா் ரணில் விக்ரமசிங்க அவா்களால் வெகு விமா்சையாக திறந்து வைக்கப்பட்டது.

“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை“ திட்டத்தின் கீழ் கல்வியமைச்சினால் நிா்மாணிக்கப்பட்ட இந்த கட்டிடம் நான்கு மாடிகளைக்கொண்டதாகும். மத்திய கொழும்பில் “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை“ திட்டத்திற்கு உள்வாங்கப்பட்ட மூன்று பாடசாலைகளில் தாருஸ்ஸலாம் பாடசாலையும் ஒன்றாகும். கடந்த 2016 செப்டம்பா் மாதம் 01ம் திகதி இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந் நிகழ்வில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் முஜீபுா் றஹ்மான், மாகாண சபை, மாநகர சபை உறுப்பினா்கள் உட்பட கல்லூாியின் அதிபா் கே. எம்.எம். நளீம் அவா்களோடு கல்லூாி நிா்வாகிகளும் மற்றும் பல முக்கிய பிரமுகா்களும் கலந்து சிறப்பித்தனா்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -