அக்கரைப்பற்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவாதாவது;
அக்கரைப்பற்று வெள்ளைப்பாதுகாப்பு வீதியில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இம் மோதலில் ஆத்திரம் கொண்ட நபர் சண்டையை விலக்குவதற்கு சென்ற ஜாபீர் என்பவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டார் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். இதனால் குறித்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இக் குழுச்சண்டையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவரை அச்சுறுத்தி தாக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் அக்கரைப்பற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவரும் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானவரை மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளார்.
இத்துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட இப்பிரதேசத்தில் இதற்கு முன்னர் கொலைச் சம்பவங்களும் பல தாக்குதல் சம்பவங்களும் மேற்கொள்ளபட்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சி.மு
.jpg)
0 comments :
Post a Comment