தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் 1281 ரூபாவால் உயர்த்துமாறு கோரி அட்டனில் சுவரொட்டிகள்

க.கிஷாந்தன்-
தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் 1281 ரூபாவால் உயர்த்துமாறு கோரி அட்டனில் 20.09.2018 அன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவாரத்தை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்ததில் கைச்சாத்திடும் தொழிற்சங்களுக்கும் இடையில் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் இதுவரை தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் எவ்வளவு என உறுதியாக தீர்மானிக்கப்படாத நிலையில் பல்வேறு தரப்பினர் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தினை உயர்த்துமாறு கோரி பல்வேறு அலுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கம்பனிக்ளுக்கு எதிராக அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் எதிர்வரும் 23 மூன்றாம் திகதி தலவாக்கலையில் சம்பளத்தினை உயர்த்துமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளன.

இந் நிலையில் 20.09.2018 அன்று அகில இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தினை 1281 ரூபாவால் உயர்த்துமாறு கோரி அட்டன் நகரில் இரு மொழிகளில் அச்சங்கத்தின் தலைவர்' கிட்ணன் செல்வராஜா தலைமையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

இது குறித்து அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கைளில்,

இன்று அரசாங்கத்தில் வேலை செய்கின்ற மற்றும் தனியார் துறையினருக்கும் அரசாங்கம் தலையிட்டு சம்பளத்தினை அதிகரித்துள்ளன. இந்நிலையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படாமையினால் மக்கள் இன்று பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இன்றுள்ள பொருளாதார நிலைக்கு ஏற்ப குறைந்தது 1281 ரூபா சம்பளமாவது வழங்குவதற்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும்' தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு அச்சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -