தகவல் அறியும் உரிமை தொடர்பான சர்வதேச தினம், எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு, தகவல் வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. தகவல் வாரம், 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைகளைப் பயன்படுத்தும் முறை குறித்து, பொதுமக்களுக்கு இதன் ஊடாக தெளிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாக, ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
"கிராமத்திற்கு தகவல் உரிமை" என்ற தலைப்பில், தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பிலான சட்டம் குறித்த நடமாடும் சேவைகளும் இந்த வார காலத்திற்குள் நடைபெறுமெனவும், ஊடகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில், பல்வேறு போட்டி நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. இதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கும் தகவல் உரிமை தொடர்பாகத் தெளிவுபடுத்துவதற்கு, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு எதிர்பார்த்துள்ளது.