ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும்குறிப்பிடுகையில்..
வரலாற்றில் முதலாவது திருமண வைபவம் அலரிமாளிகையில் நேற்று கோலகலமாகநடைபெற்றுள்ளது. கடந்த ஆட்சியின் போது மக்கள்சேவைக்காக பயன்படுத்தப்பட்ட அலரிமாளிககை தற்போதுதிருமண நடனமாடும் களியாட்ட விடுதியாக்கப்பட்டுள்ளது.
நாமல் பேபியின் லம்போகினி பற்றி விமர்சித்தவர்கள் அலரிமாளிகை ஆடம்பர திருமணம் தொடர்பில் மௌனமாகஉள்ளனர்.
இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்தை உருவாக்கிய மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியை கவிழ்க்க கடந்த காலங்களில்பல்வேறு போலி விமர்சனங்களை முன்வைத்திருந்தார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் புதல்வர்களிடம்லம்போகினி கார் உள்ளதாக கூறினார்கள், தங்க குதிரைஉள்ளது என கூறினார்கள், விலையுயர்ந்த கடிகாரம்,பாதணிகள் உள்ளதாக கூறினார்கள் இவை அனைத்தும்பொய்யான குற்றசாட்டு என்பது தற்போதுநிரூபணமாகியுள்ளது.
அன்று இது தொடர்பில் வாய் கிழிய விமர்சித்தவர்கள் இன்றுஅலரி மாளிகையில் திருமண கழியாட்ட விழாக்கள் நடக்கும்போது ஒன்றும் அறியாதவர்கள் போல இருக்கிறார்கள் எனகுறிப்பிட்டார்.