மாவடிப்பள்ளியில் ஆர்ப்பாட்டம்

யு.எல்.எம் றியாஸ்-
காரைதீவு பிரதேச சபை எல்லைக்குள் உள்ள மாவடிப்பள்ளி கிராமத்திற்கு பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்துத் தருமாறு கோரி இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது..
இவ் ஆர்ப்படத்தில் மாவடிப்பள்ளியில் உள்ள 12 விளையாட்டு கழகங்கள் கலந்துகொண்டன
இதன்போது “ பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே எங்களது விடயத்தில் கவனமெடுங்கள், நல்லாட்சி அரசே பொது மைதானம் அமைத்துத் தாருங்கள்” உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை தங்கிய வாறு மாவடிப்பள்ளி பிரதான வீதியில் இவர்கள் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.
தற்போது விளையாடுவதற்காக மாவடிப்பள்ளியில் உள்ள அல் - அஸ்ரப் மகாவித்தியாலய மைதானத்தையே விளையாடுவதற்காகவும் ஏனைய உடற் பயிற்சிக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இருந்த போதும் இவ் மைதானம் போதிய இட வசதி, ஏனைய வசதிகள் இன்மையால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அதற்குப் பதிலாக பொது மைதானம் ஒன்றை அமைத்துத் தருமாறு வலியுறுத்தியே இன்று இவர்கள் ஆர்ப்படத்தில் ஈடுபட்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -