மக்கள் காங்கிரஸ் மாகாண எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க முடிவு???


ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-

பாராளுமன்றத்தில் நாளை (24) சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளமாகாண எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்த்து வாக்களிக்க அகில இலங்கை மக்கள்காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.

சிறுபான்மை மக்களை பெரிதும் பாதிக்கும் இந்த அறிக்கைக்கு ஒரு போதும் தமது கட்சிஆதரவளிக்கப் போவதில்லை என்று அகில மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்,கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கடந்த வாரம் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும் இந்த விடயம்பிரஸ்தாபிக்கப்பட்ட போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தமது கட்சியின் நிலைப்பாட்டைமீள் உறுதிப்படுத்தினார். குறிப்பிட்ட கூட்டத்தில் அகில மக்கள் காங்கிரஸ், முஸ்லிம்காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான கட்சி ஆகியன எல்லை மீள்நிர்ணயஅறிக்கை தொடர்பில் தமது எதிர் நிலைப்பாட்டை பிரதமர் ரணிலிடம் தெரிவித்த போது,பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் சிறுபான்மைக் கட்சிகளின்நிலைப்பாட்டுக்கு ஆதரவளித்து எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்த்தேவாக்களிக்குமென்ற உறுதிமொழி பெறப்பட்டது.

ஜனநாயக அரசில் எந்தக் கட்சி எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் சிறுபான்மையினரைப்பாதிக்கும் இந்த அறிக்கையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்ப்பதெனஉறுதியாக அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -