டிஎம்கே அஸோஸியேட்ஸில் அரபு மொழி கற்கையினை ஆரம்பிக்க நடவடிக்கை!

புனித அல் குர்ஆனை பொருள் விளங்கி ஓதுவோம் எனும் தொனிப்பொருளில் டிஎம்கே அஸோஸியேட்ஸ் கல்வி நிறுவனத்தில் அரபு மொழி கற்கையினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் அண்மையில் டிஎம்கே அஸோஸியேட்ஸில் இடம்பெற்றது. அரபு மொழியினை மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி இஸ்லாமிய அடிப்படையிலான வாழ்க்கை வழி முறைகளை மக்களுக்குள் உருவாக்கி இம்மை மறுமை ஆகிய இரு வாழ்க்கைக்கும் பொருத்தமானதாக மனித சமூகத்தை கட்டியெழுப்பும் வகையில் புனித அல் குர்ஆனை பொருள் விளங்கி ஓதும் அர்த்தமுள்ள வாழ்க்கையை உருவாக்கும் சிந்தனையை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இன நல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்தை தலைவருமான அஷ்ஷேஹ் அப்துல் காதர் மஷூர் மௌலானா அவர்களின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.

இவ் ஆரம்ப கட்ட கலந்துரையாடலில் சாய்ந்தமருது ஷூரா கவுன்சிலின் தலைவரும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைவருமான டாக்டர் எம் ஐ எம் ஜெமீல், சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பேஷி இமாம் எம்.ஐ.ஆதம்பாவா மௌலவி, சாய்ந்தமருது ஜூம் ஆ பெரிய பள்ளிவாசல் இமாம் முஹம்மத் பாஹிர் மௌலவி, சம்மாந்துறையை சேர்ந்த மௌலவி அஸ்ஸாதி மஹ்ரூப் முஸ்தகீம் முப்தி மற்றும் மௌலவி முஹம்மது ரம்சீன் காஷிஃபி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் அரபு மொழியினை பரிபூரணமாக புனித அல்குர்ஆனை சுயமாக விளங்கி அதன் படி வாழ்க்கை முறைகளை ஏற்படுத்தி கொள்வதுடன் அரபு மொழியாற்றல் மூலம் தங்களது தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களும் ஏற்படுவதோடு உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளிலும் தொழிலினை பெற்று தங்களது சொந்த வாழ்க்கையினை அமைத்துக்கொள்ளும் பாக்கியத்தினையும் பெறும் நீண்டகால நோக்கிலான ஒரு திட்டமாகும்.

இது தொடர்பிலான பாடத்திட்ட வரைபு, வளவாளர்களின் தேர்வு, மாணவர் தெரிவு முறை போன்ற அடிப்படை விடயங்கள் தயாரிக்கப்படுவதோடு டிஎம்கே அஸோஸியேட்ஸ் நிறுவனமூடாக எதிர்வரும் 2019 ஜனவரிக்கு முன்னர் நாடு தழுவிய ரீதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இதன் மூலம் அரபு மொழியினை வீட்டு மொழியாக உருவாக்கி முழு தேச மக்களும் நன்மையடையச் செய்வதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்ததொரு சமூக கட்டமைப்பு உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -