மும்முனை/பல்முனைப் போட்டி நடைபெற்று யாரும் 50% பெறாவிட்டால் ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதெப்படி


வை எல் எஸ் ஹமீட்-
ந்த விடயம் அரசியலமைப்புச்சட்டம் சரத்து 94 மற்றும் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு ஜனாதிபதி தேர்தலில் இரு வேட்பாளர் மாத்திரம்போட்டியிட்டால் அதில் ஒருவருக்கு வாக்களிக்கலாம்.

மூவர் போட்டியிட்டால் ஒருவர் இரு வாக்குகளை அளிக்கலாம். (அதில் முதலாமவருக்கு 1 என்றும் இரண்டாமவருக்கு 2 என்றும் எழுதலாம்.)

மூன்று பேருக்குமேல் போட்டியிட்டால் ஒருவாக்காளர் அதிகப்பட்சம் மூன்று வாக்குகளை அளிக்கலாம். (அவருடைய தெரிவிற்கேற்ப 1,2,3 இலக்கங்களை இடலாம்.)

ஒரு வேட்பாளர் 50% மேல் வாக்குகள்பெறின் அவர் வெற்றிபெற்றவராகப் பிரகடனப்படுத்தப்படுவார்.

ஒருவரும் 50% இற்குமேல் வாக்குப்பெறாதபோது, அதிகூடிய வாக்குகளைப்பெற்ற முதல் இருவரையும் தவிர்த்து ஏனைய வேட்பாளர்கள் போட்டியிலிருந்து அகற்றப்படுவர்.

அடுத்த கட்டம்
———————-

அடுத்ததாக போட்டியிலிருந்து அகற்றப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச் சீட்டுக்கள் மீண்டும் திறக்கப்பட்டு அவற்றில் அவர்களது இரண்டாவது ‘ தெரிவு வாக்குகள்’ போட்டியில் தொடர்ந்தும் இருக்கின்ற முதல் இரு வேட்பாளர்களில் யாருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றதோ அவருடைய வாக்குகளுடன் கூட்டப்படும்.

உதாரணமாக A, B, C, D, E என ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள் எனக் கொள்வோம். யாரும் 50% தைத் தாண்டவில்லை; எனில் அதிகூடிய வாக்குகள் பெற்றவர்கள் A யும் B யும் என்றால் ஏனையவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.

இப்பொழுது C, D, E ஆகியோரது வாக்குகள் மீண்டும் திறக்கப்பட்டு அவற்றில் A யிற்கு அல்லது B இற்கு அளிக்கப்பட்ட இரண்டாவது வாக்கு இருக்கின்றதா? எனப் பார்த்து அவை உரியவரின் வாக்குகளுடன் கூட்டப்படும்.

குறிப்பு: உதாரணமாக ஒருவர் A இற்கு முதலாவது வாக்கை அளித்துவிட்டு B இற்கு இரண்டாவது வாக்கை அளித்திருந்தால் அது கணக்கில் எடுக்கப்பட மாட்டாது.

அடுத்ததாக

சிலர் இரண்டாவது வாக்கை இந்த இருவரையும் தவிர்த்து வேறு ஒருவருக்கு வழங்கியிருக்கலாம். அப்படியானால் அவரது மூன்றாவது விருப்பத்தெரிவு இந்த இருவரில் ஒருவருக்கு இருக்கின்றதா? எனப் பார்க்கப்படும். அவ்வாறு இருந்தால் உரியவரின் வாக்குகளுடன் கூட்டப்படும்.

குறிப்பு: ஒருவரின் இரண்டாவது வாக்கு இந்த இருவரில் ஒருவருக்கு அளிக்கப்பட்டிருந்தால் மூன்றாவது வாக்கு கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது. உதாரணமாக, ஒருவர் தனது இரண்டாவது வாக்கை A இற்கு வழங்கிவிட்டு மூன்றாவது வாக்கை B இற்கு வழங்கினால் அது கவனத்தில் கொள்ளப்படாது.

இவ்வாறு இவர்கள் பெற்ற வாக்குகள் கூட்டப்பட்டு இவ்விருவரில் யாருக்கு அதிகூடிய வாக்குகள் கிடைக்கின்றதோ அவர் வெற்றிபெற்றவராக பிரகடனப்படுத்தப்படுவார்.

இருவருக்கு சமமான வாக்குகள் கிடைத்தால் குலுக்கல்மூலம் தெரிவுசெய்யப்படுவார்.

குறிப்பு: இங்கு 50% இற்குமேல் என்ற ஒன்று இல்லை. யாருக்கு அதிகூடிய வாக்கோ அவர்தான் வெற்றியாளர்.

குறிப்பு: முதலாமவருக்கு புள்ளடியிட்டு அடுத்தவர்களுக்கு 2,3 என்று எழுதினாலும் செல்லுபடியாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -