பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அச்சாணியான கைத்தொழில் சமூகத்தை ஊக்குவிப்பது அரசின் பொறுப்பு

-யாழ் நகரில் அமைச்சர் ரிஷாட் -

ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்- 

நாட்ட்டின் வருமானத்தின் முக்கிய அச்சாணியாக விளங்குகின்ற கைத்தொழில் மற்றும் வர்த்தக சமூகத்தின் மேம்பாட்டுக்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களில் வடக்கு மக்களும் நன்மை அடையும் வகையிலே அரசு விசேஷட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அதிகாரசபையினால் வடமாகாண தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று (21) மாலை யாழ் செல்வ மஹால் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மங்கள சமரவீர, வடக்கு முதலமைச்சர் விக்ணேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கூறியதாவது

வட மாகாணத்தை பொறுத்த வரையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்தும் தொழில் கூடங்களாக கைத்தொழிலாளர்களே. திகழ்கின்றனர் எனவே இவர்களுக்கு கைகொடுக்கும் பொறுப்பும், ஆக்கபூர்வமான உதவிகளை வழங்கும் கடப்பாடும் அரசுக்கு இருக்கிறது. அதனாலேயே நிதி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘எண்டபிரைஸ் ஸ்ரீ லங்கா ‘ எனும் புதிய திட்டம் மூலம் நூற்று கணக்கில் கடன் வசதிகளை வழங்கி வருகின்றது அது மட்டுமின்றி பயனாளிகளுக்கு வழங்கபடும் வட்டியின் பளுவை குறைத்து அதனை சுமக்கவும் அரசு தயாராகி உள்ளது

மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணத்தில் அவ்வாறான கடன் உதவிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன இந்த மாவட்டத்தில் உள்ள தேவையுடையோரை இனம் காணும் பொறுப்பு இந்த பிரதேசத்தில் உள்ள வர்த்தக சம்மேனத்துக்கு இருக்கின்றது

நமது பிரதேச மக்கள் சிற் சில தேவைகளுக்கு கடந்த காலங்களில் பெற்ற கடன் உதவிகள் மூலம் விரக்தியின் விளிம்புக்கே சென்று கொண்டிருப்பதை நாம் அறிவோம். இதற்கான விடிவை பெற்றுக்கொள்வதற்கு எண்ட பிரைஸ் ஸ்ரீ லங்கா பெரிதும் உதவும். சில கடன் திட்டடங்களுக்கு 8௦ % வட்டியையும் சில திட்டங்களுக்கு 50% வட்டியையும் நிதி அமைச்சு பொறுப்பு ஏற்கின்றது. எனவே இதனை சரியாக பயன்படுத்தி எமது கைத்தொழில் துறையை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்

கைத்தொழில் துறையிலும் வாணிப துறையிலும் திறன் உள்ளவர்களை கெளரவித்து விருது வழங்கும் இந் நாளில் பிரதமரும் நிதி அமைச்சரும் கலந்து கொள்வது மகிழ்ச்சியானது

மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்த அழிவினால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதில் வர்த்தக சமுகமும் கைத்தொழிலாளர்களும் பெரிதும் பாதிகப்பட்டதை நாம் அறிவோம் .இந்த அழிவினால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட சாராருக்கு பல பிரச்சினைகள் உள்ளதை நாம் உணர்ந்து உதவி வருகின்றோம்

யுத்தத்தினால் அழிவடைத்து போன, சிதைவடைந்து போன கைத்தொழில் துறையை மீளக் கட்டி எழுப்புவதற்காக நாம் உருவாக்கிய இந்த அரசிடம் இருந்து நிறையவே பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த அரசு மேற்கொண்டு இருக்கும் அறிய திட்டங்களை எடுத்துரைத்தனர்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -