ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு 32 பேர் போட்டி


எம்.எஸ்.எம்.ஸாகிர்-ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு - 05 நாரஹேன்பிட்டி, பொல்ஹென்கொட இலக்கம் 163, கிருலபன எவன்யூவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதம அதிதியாகவும், நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்கா ஓஸ்சுஹதார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர், சமூக விஞ்ஞான அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான புரவலர் எம். ஜே. முஹம்மத் இக்பால் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பொதுக்கூட்டத்தின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ள அதேசமயம், மேற்படி நிர்வாக ஆண்டிற்கான தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன், பொதுச் செயலாளராக என்.ஏ. எம். ஸாதிக் ஷிஹான், பொருளாளராக அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர் மூன்று மேற்படி பதவிகளுக்கும் போட்டிகள் இன்றி ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நிறைவேற்றுக் குழுவிற்கு பதினைந்து பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 32 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்கான தெரிவு பொதுக் கூட்டத்தின் போது வாக்களிப்பு மூலம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்றுக் குழுவிற்கு போட்டியிடுவோர் விபரங்கள் பின்வருமாறு :-

1. எம்.ஏ.எம். நிலாம் (லேக் ஹவுஸ்)

2. எம்.இஸட். அஹ்மத் முனவ்வர் (வானொலி)

3. எஸ்.ஏ. அஸ்கர் கான் (நொலேட்ஜ் பொக்ஸ்)

4. ஹில்மி மொஹம்மட் (அமைச்சு ஊடக பிரிவு)

5. எஸ்.எம்.எம். முஸ்தபா (பிராந்திய ஊடகவியலாளர்)

6. ஜாவிட் முனவ்வர் (வானொலி)

7. கலைவாதி கலீல் (நவமணி)

8. எம்.பி.எம். பைறூஸ் (விடிவெள்ளி)

9. புர்கான் பீ. இப்திகார் (வானொலி)

10. பியாஸ் முஹம்மட் (மீள்பார்வை)

11. ஏ.ஜே.எம். பிரோஸ் (நவமணி/அமைச்சு ஊடக பிரிவு)

12. நுஸ்கி முக்தார் (டெய்லி சிலோன்)

13. எம்.எஸ். ரிபாஸ் (பிராந்திய ஊடகவியலாளர்)

14. எஸ்.எம். சர்ஜான் (டெய்லி சிலோன்)

15. ஸமீஹா ஸபீர் (தொலைக்காட்சி)

16. ஷாமிலா ஷெரீப் (வானொலி)

17. சுஐப் எம். காசிம் (அமைச்சு ஊடக பிரிவு)

18. ரிப்தி அலி (விடியல் இணைய தளம்)

19. எஸ்.ஏல். அஸீஸ் (பிராந்திய ஊடகவியலாளர்)

20. பிஸ்ரின் மொஹம்மட் (யூ.ரி.வி தொலைக்காட்சி)

21. ஆதில் அலி சப்ரி (நவமணி)

22. ஏ.ஆர். பரீட் (தினகரன்)

23. பஸ்ஹான் நவாஸ் (ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)

24. எம்.எஸ்.எம். ஸாகிர் (நவமணி)

25. ஏ. மொஹம்மட் பாயிஸ் (அரசாங்க தகவல் திணைக்களம்)

26. ஐ.எம். இர்ஷாத் (எங்கள் தேசம்)

27. ஐ. ரியாஸ் (பிராந்திய ஊடகவியலாளர்)

28. அனஸ் அப்பாஸ் (தேசிய ஊடக மையம்)

29. எம். லாபிர் (பிராந்திய ஊடகவியலாளர்)

30. ஏ.ஆர். முஹம்மட் ரிபாஸ் (வானொலி)

31. டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் (அமைச்சு ஊடக பிரிவு)

32. பலீலுர் ரஹ்மான் (பிராந்திய ஊடகவியலாளர்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -