தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) வருடாந்த இப்தார் , ஊடகவியலாளர் களுக்கான அன்பளிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வும் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இன்று (12) பாலமுனை கஸமாறா ரெஸ்டூரன்டில் இடம்பெற்றது.
இதன் போது தேசிய ரீதியில் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதற்காக இவ்வமைப்பு தொடர்ந்தும் தனது கால்களை அகல விரித்து சேவையாற்றுவதோடு எதிர்காலத் தில் ஊடகவியலாளர்களின் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் முன்னின்று உழைக்கும் எனவும் தலைவர் எஸ்.எம். அறூஸ் தனதுரையில் தெரிவித்தார்.
இந்த இப்தார் நிகழ்வில் அமைப்பின் செயலாளர் பைசல் இஸ்மாயில் தேசிய அமைப்பாளர் றியாத் ஏ. மஜீத் உட்பட பிரதேசத்தின் அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள், வைத்தியர்கள், கல்விப் புலத்தின் உயர் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு சங்கத்தின் ஊடகவியலாளர்களுக்கு சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பேக் மற்றும் பண வவுச்சர் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.