“மக்களின் தேவைகளை அவர்களின் காலடிக்குச்சென்று கேட்டறிந்து பூர்த்தி செய்யவேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்” தவிசாளர் தாஹிர்

வீடு வீடாகச் சென்று வாக்குக்கேட்கத் தெரிந்த தலைமைகள், வெற்றி பெற்றபின் வாக்களித்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்துவிடுகின்றனர். அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் சரியான தேவைகளை அறியாமல், முறையற்ற விதத்தில் அபிவிருத்தி தொடர்பான சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அவை மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பயனற்று அசெளகரியமாக மாறுகின்றன. இது போன்ற வள விரயங்கள் ஏற்படாமல் மக்களின் கருத்துக்களை உள்வாங்கி, முறையான திட்டமிடலுடன் கூடிய அபிவிருத்திகளையே நாம் செய்ய முயற்சிக்கிறோம் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார்

நிந்தவூரின் வட்டாரங்களை மையப்படுத்தி அபிவிருத்தி திட்டங்களை பரிந்துரைக்கும் வகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடனான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வட்டாரங்கள் வாரியான ஆலோசனை குழுக்களை அமைக்கும் நோக்கில், நிந்தவூர் 8 ஆம் வட்டாரமான அரசியடி வட்டாரத்தின் முதலாவது கூட்டம் நேற்று (26) நிந்தவூர் ஜெர்மன் நட்புறவு பாடசாலையின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
அரசியடி வட்டாரத்தின் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எல்.ஏ மஜீத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், அதிதியாக கலந்துகொண்டு பேசும்போதே தவிசாளர் தாஹிர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த தேர்தல் அனைவருக்கும் கனதியான பாடங்களைப் புகட்டியுள்ளது, கடந்த காலங்களில் இல்லாத பலமான ஆளும் தரப்பும், பலமான எதிர்த்தரப்புமாக நிந்தவூரின் பிரதேச சபை அமையப்பெற்றுள்ளது. இன்நிலை நிந்தவூர் மக்களை பொறுத்தவரை ஒரு ஆரோக்கியமான விடயமாகும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனினதும், உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினதும் ஆலோசனைகள் மற்றும் உதவிகளைக் கொண்டு, நிந்தவூரின் அபிவிருத்தி திட்டங்களை உங்களுடைய பங்களிப்புடன் முறையான விதத்தில் மேற்கொள்ள இருக்கிறோம்.
நமது 8 ஆம் வட்டாரத்தில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இதில் அட்டப்பளம் பிரதேசத்தில் தமிழ் சகோதரர்களும் வாழ்கின்றார்கள். இங்கு கோயில்கள், பள்ளிவாசல்கள் , பாடசாலைகள், வீதிகள் உள்ளிட்ட பல விடயங்களில் தேவைகள் அதிகம் காணக்கூடியதாகவுள்ளன. கடந்த காலங்களிலும் அவற்றைக் கருத்தில்கொண்டு செயற்பட்டிருக்கிறோம். அது போன்று எதிர்காலங்களின் அதிகளவான கவனத்தை இப்பகுதி அபிவிருத்திக்காக செலுத்தவுள்ளோம்.
அந்தவகையில் நிந்தவூரின் வீதி அபிவிருத்திக்காக முதற்கட்டமாக எமக்கு கிடைக்கப்பெறவுள்ள 10 கிலோமீட்டர் வீதியில், 5 கிலோமீட்டரை அரசியடி வட்டாரத்திற்கு வழங்க ஆயத்தமாகவுள்ளோம் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடனான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் அரசியடி வட்டாரத் தொண்டர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -