மனைவியின் தொலைபேசியை சோதனையிடும், ஆண்களுக்கு தண்டனை - இளவரசர் அதிரடி அறிவிப்பு


னைவிக்கு தெரியாமல் அவரது கைத்தொலைபேசியை எடுத்து சோதனை செய்யும் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்து இருக்கிறது.
மிகவும் அதிக அளவில் இதற்கு தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். முக்கியமாக பெண்களுக்கு நிறைய சுதந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு அங்கு பாராட்டும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பெண்களுக்கு இராணுவத்தில் சேர அனுமதி அளித்து சவுதி முடி இளவரசர் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்.
2018 மார்சில் இருந்து சவுதியில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்றார். 2018ல் இருந்து பெண்கள் கார் ஓட்ட லைசென்ஸ் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
விரைவில் சவுதியில் பெண்கள் பர்தா அணிய கட்டாயம் இல்லை என்று சட்டம் கொண்டு வரப்படலாம் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
தற்போது மனைவிக்கு தெரியாமல் அவர்கள் தொலைபேசியை எடுத்து சோதனை செய்யும் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்து இருக்கிறது.
அதன்படி மனைவிக்கு தெரியாமல் அவர்களின் தொலைபேசியை எடுத்து பார்ப்பது, கேலரியை பார்ப்பது, சமூக வலைத்தள கணக்குகளை சோதனை செய்வது, யாருடன் பேசுகிறார் என்று சண்டை போடுவது எல்லாம் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும்.
இந்த குற்றத்திற்கு ஒரு வருடம் வரை சிறை அளிக்கப்படலாம். அதே சமயம் 85 லட்சம் முதல் 90 லட்சம் அவரை அபராதம் விதிக்கப்படலாம்.

சவுதியில் சமீப காலங்களில் கைத்தொலைபேசி ரீதியாக நிறைய குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
பெண்களின் சுதந்திர தேவை தான் இந்த சட்டத்திற்கு பின் முக்கிய காரணம் என்று முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

பெண்கள் அவர்கள் விருப்பப்படி இணையத்தை பார்க்க வேண்டும், அவர்களை யாரும் கட்டுப்படுத்த கூடாது என்றுள்ளார்.

ஆண்களின் வேவு பார்க்கும் குணத்தை போக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்றுள்ளார்.

எது எவ்வாறாயினும் சவூதி அரேபியா இஸ்லாமிய நாடுகளின் தலைமையகம் என்பதில் இருந்து வெகுதூரம் செல்லும் வாய்ப்பே உள்ளதுடன்.

புனித கெளபாவைப் பாதுகாக்க முஸ்லீம்கள் ஒற்றுமைப்பட வேண்டியது கட்டாயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -