அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-
திகனை பல்லேகலவில் அமைந்துள்ள பள்ளிவாசல் மற்றும் அதனை அண்டியுள்ள வியாபார நிலையங்களில் இடம்பெற்ற இனவாதிகளின் அட்டகாசத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பார்வையிட்டார்.
இனவாதிகள் பள்ளிவாசலுக்குள் நுழைந்து குர்ஆண்கள் மற்றும் கிதாபுகளை தீக்கிரையாக்கி, பள்ளிவாசலையும் முற்றாக சேதத்துக்குள்ளாக்கியதுடன், அருகில் இருந்த கடைத் தொகுதியையும் முற்றாக அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதன்போது, மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான். மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர், சட்டத்தரணி அன்சில் ஆகியோரும் அமைச்சருடனிருந்தனர்